சிறிய தந்தையால் தாக்கப்பட்ட 14 வயது சிறுவன் மரணம் | காத்தான்குடியில் சம்பவம்

காத்தான்குடியில் சிறிய தந்தையால் தாக்கப்பட்டு மட்டக்களப்பு வைத்தியசாலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த 14 வயதான சிறுவன் ஒருவர் மரணமடைந்தார்.
கடந்த புதன்கிழமை அவர் வீட்டில் வைத்து தாக்கப்பட்ட நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.
இதுதொடர்பாக சிறுவனின் தந்தையால் பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டுக்கு அமைய, 26 வயதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டு இம்மாதம் 14ம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
எனினும் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வந்த சிறுவன் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
Please follow and like us: