துருக்கிக்கு ‘LIGHT FOR LIFE’ அமைப்பினால் 10 மில்லியன் ரூபா நன்கொடை

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக ‘LIGHT FOR LIFE’ அமைப்பினால் துருக்கிக்கு 10 மில்லியன் ரூபா நன்கொடையாக வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதற்கான காசோலையினை ‘LIGH FOR LIFE’ அமைப்பின் தவிசாளர் ஜெயினுலாப்தீன் இலங்கைக்கான துருக்கியின் தூதுவர் திருமதி ராகிபே டெமட் செகெர்சியோக்லுவிடம் கையளித்தார்.

இந்த நிகழ்வு கொழும்பில் அமைந்துள்ள துருக்கி தூதுவராலயத்தில் நேற்றைய தினம் இடம்பெற்றது.

இதன்போது அமைப்பின் செயற்குழு உறுப்பினர்களான தொழிலதிபர் பைசல் புஹாரி, எம்.ஐ.எம். இம்தியாஸ், உஸ்மான் ஜௌபர் மற்றும் அஸ்ரின் ஸஹீர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Please follow and like us: